Load Image
Advertisement

ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

கோவை:மாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட சங்கனுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் ஏழு வகுப்பறைகள், 30 லட்சம் மதிப்பீட்டில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கழிவறை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில், ரூ.15 லட்சம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து, ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில், ரூ.66 லட்சத்தில் ஆறு கூடுதல் வகுப்பறைகள், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.15 லட்சத்தில் கழிவறைகள் கட்டப்படுகின்றன.

மொத்தம், 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துவரும் கட்டுமான பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார். விடுமுறை முடியும் முன் பணிகளை விரைந்து முடித்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொறியாளர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மத்திய மண்டலம், 31, 32, 46வது வார்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூ.1.96 கோடி மதிப்பீட்டில், 4.18 கி.மீ., துாரத்துக்கு, 35 தார் சாலைகள் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த கமிஷனர், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement