Load Image
Advertisement

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த 62 ஏக்கர் மட்டுமே பாக்கி!

கோவை:கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான, 62.78 ஏக்கர் நிலம் இன்னும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலங்கள் 7 வகையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்கு, மொத்தம் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை, மாநில அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் போக, 461.90 ஏக்கர் நிலம், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலமாகும்.

இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, பத்திரம் பதிவு செய்யும் பணி 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை நில உரிமையாளர்கள் 500 பேருக்கு 1,734 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்டா நிலம் 461.90 ஏக்கரில், இதுவரை 399.02 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 62 ஏக்கர் நிலம் எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதால் வேலை முடியாமல் மாதக்கணக்கில் இழுப்பதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பிட்ட இந்த 62 ஏக்கரையும், 7 வகையாக பிரித்து நிலம் எடுக்கும் அதிகாரிகள் பட்டியல் இட்டுள்ளனர். பிரச்னைக்குரிய நிலம் (ஒரே நிலத்துக்கு பலர் உரிமை கோருவது), உரிமையாளர் தெரியாதவை, வழித்தடங்கள், ஆவணங்கள் இல்லாத மற்றும் தவறான ஆவணங்கள் கொண்ட நிலம், அதிக இழப்பீடு கோரும் நிலம், விரைவில் கையகப்படுத்தப்பட உள்ள நிலம் என 7 வகையாக பிரித்துள்ளனர்.

இதில், வழித்தடம் என்ற பெயரில் இருக்கும் 12.8 ஏக்கர் நிலம் குறிப்பிட்ட அந்த நிலப்பரப்பில் தடங்களாக பயன்படுத்தப்படுபவை. அந்த நிலம் முழுவதும், பொது பயன்பாட்டுக்கானவை என்பதால், அவற்றை எடுப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. மீதமுள்ள 50 ஏக்கர் கையகப்படுத்துவதற்கு தீர்வு கண்டாலே விமான நிலைய விரிவாக்கம், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடும்.

சிறப்பு டி.ஆர்.ஓ., ரவி கூறுகையில், ''நிலம் எடுக்கும் பணியை விரைந்து முடிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. நில உரிமையாளர்களிடம் நானே பேச்சு நடத்தியும் வருகிறேன்,'' என்றார்.



பரப்பு - இழுபறிக்கு காரணம்

8.81 ஏக்கர் - பிரச்னைக்குரிய நிலம்7.06 ஏக்கர் - உரிமையாளர் தெரியவில்லை12.8 ஏக்கர் - வழித்தடங்கள்3.67 ஏக்கர் - ஆவணங்கள் இல்லாத நிலம்3.85 ஏக்கர் - அதிக இழப்பீடு கோருவதால் தாமதம்21.2 ஏக்கர் - குடும்பத் தகராறு5.39 ஏக்கர் - விரைவில் கையகப்படுத்தல் நடக்கும்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement