அரங்கை பார்வையிட வாங்க அழைக்கிறது மின்வாரியம்
கோவை:காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறும் பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, தங்களது அரங்கை பார்வையிட வருமாறு, மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
மேற்பார்வைப் பொறியாளர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொருட்காட்சி வளாகத்தில் மின்வாரியம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மின் வினியோக அமைப்பு, நிலக்கரி மூலம் அனல் மின் உற்ப்ததி, குந்தா நீர் மின் உற்பத்தி திட்டம், காடம்பாறை நீரேற்று மின் உற்பத்தி நிலையம், வேகத்தடை மூலம் மின் உற்பத்தி, காற்றாலை, சோலார் மின் உற்பத்தி, மின் விபத்தை தவிர்க்கும் முறைகள், மின் சேமிப்பு, மின்கசிவு தடுப்பு சாதனங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கப்படுகின்றன. இந்த அரங்கை, குழந்தைகளுடன் பார்வையிட்டு, மக்கள் மின் உற்பத்தி, வினியோகம், சிக்கனம், பாதுகாப்பு முறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!