Load Image
Advertisement

இன்று தேசிய கூடைப்பந்து போட்டி வளரும் வீரர்கள் கண்டிப்பாக பாருங்க!

கோவை:தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று முதல் வரும், ஜூன் 1ம் தேதி முதல் நேரு ஸ்டேடியம் எதிரேவுள்ள, மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடக்கவுள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட கூடைப்பந்து துணைத்தலைவர் பழனிசாமி கூறியதாவது :

தேசிய அளவில், 56வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையும், 20வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையும் இன்று துவங்கி வரும், ஜூன் 1ம் தேதி நிறைவடைகிறது.

இப்போட்டியில் முன்னணி அணிகள் பங்கேற்கவுள்ளன.

ஆண்கள் பிரிவில், 10 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்கவுள்ளன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ. 1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் மற்றும் மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ. 20 ஆயிரம், நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு, பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும். மாலை, 5:00 முதல் 9:00 மணி வரை போட்டிகள் நடக்கின்றன.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement