துாத்துக்குடி மின் நிலையம் 20 நாள் உற்பத்தி நிறுத்தம்
சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில் மின் வாரியத்திற்கு தலா, 210 மெகா வாட் திறனில் ஐந்து அலகுகள் உடைய துாத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு உற்பத்தியாகும் மின்சாரம், தென் மாவட்ட மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
தற்போது, காற்றாலைகளில் இருந்து அதிக மின்சாரம் கிடைக்கிறது. எனவே, துாத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக நேற்று இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு, அடுத்த மாதம், 14ம் தேதி மீண்டும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!