Load Image
Advertisement

10 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடி இலவசம்

சென்னை:தோட்டக்கலைத்துறை வாயிலாக, 10 லட்சம் குடும்பங்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்குவதற்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்களின் உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இவற்றை அதிகரிக்கும் பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, 'மாநிலம் முழுவதும் உள்ள, 10 லட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பழமரக் கன்றுகள் வழங்கப்படும் ' என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்த ,15 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement