Load Image
Advertisement

கண்டக்டர் மீது தாக்குதல் போதை ஆசாமிக்கு சிறை

Jail for the drug addict who attacked the conductor    கண்டக்டர் மீது தாக்குதல் போதை ஆசாமிக்கு சிறை
ADVERTISEMENT
பல்லடம்:பல்லடத்தில், அரசு பஸ் நடத்துனரை தாக்கிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையத்தை சேர்ந்த குப்புசாமி மகன் பேச்சிமுத்து 59; அரசு பஸ் நடத்துனர்.

பல்லடம் அடுத்த, சேடபாளையத்தை சேர்ந்த செல்லப்பா மகன் பெடல் மாக்ஸ்; 43; கட்டட தொழிலாளி. நேற்று காலை, பல்லடம் - திருப்பூர் செல்லும் அரசு பஸ் எண்: 7ல் ஏறினார். பஸ், வெட்டுப்பட்டான்குட்டை பஸ் ஸ்டாப் கடந்த நிலையில், மது போதையில் இருந்த பெடல் மாக்ஸ் டிக்கெட் எடுக்கவில்லை.

இது குறித்து நடத்துனர் பேச்சிமுத்து கேட்க, கம்பியால், அவரின் கண்ணில் தாக்கினார். இதில், காயமடைந்த பேச்சிமுத்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், பெடல் மாக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement