Load Image
Advertisement

வெற்றிக்கதை வளர்ச்சிக்கு வழிகாட்டும்

Success Guides Growth    வெற்றிக்கதை வளர்ச்சிக்கு வழிகாட்டும்
ADVERTISEMENT
திருப்பூர்:''பலவீனமானவருக்கு, தோள் கொடுப்பதை காட்டிலும், மற்றவர்களின் வெற்றிக்கதை வளர்ச்சிக்கு வழிகாட்டும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், 'யங் டீ' அமைப்பு சார்பில், திருமுருகன்பூண்டி, பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

'தவமாய் தவமிருந்து' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மனிதவள மேம்பாட்டாளர், ஈரோடு கதிர் பேசினார். இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் திருக்குமரன், துணை தலைவர் இளங்கோவன், இணைசெயலாளர்கள் சின்னசாமி, குமார்துரைசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:

அடுத்த தலைமுறைக்கு தொழிலை கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். தொழில்களின் ஆராய்ந்து, வருவாயை பெருக்குவது, காப்பாற்றுவது, அவற்றை பக்குவமாக செலவிடுவது மிக முக்கியம்.

'யங் டீ' அமைப்பின் இம்முயற்சியால், ஏற்றுமதியாளர்கள் அதிகம் பயன்பெறுவர்; தொழில்நெறி பாதுகாக்கப்படும். பலவீனமானவருக்கு, தோள் கொடுப்பதை காட்டிலும், மற்றவர்களின் வெற்றிக்கதை அதிக ஊக்கத்தை வழங்கும், வளர்ச்சிக்கும் வழிகாட்டும்.

அனைத்து தரப்பினரும், அனைத்து தரப்பிலும் வாய்ப்புகளை பயன்படுத்தி, வாழ்வில் உயர வேண்டும். சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும், தர்மத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

'பியோ' தலைவர் சக்திவேல் பேசுகையில், ''தொழில் துவங்கும் போது, ஒற்றுமையாக இருப்பார்கள்; தொழில் வளர வளர, பணம் சேரும்போது, வேற்றுமையும் வளர்ந்து விடுகிறது. திருப்பூரில் இதை கண்கூடாக பார்க்க முடியும். 'தவமாய் தவமிருந்து' சிறப்பு கருத்தரங்கு திருப்பூருக்கும், இளம் தலைமுறையினருக்கும் மிகுவும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.

கருத்தரங்கில், இளம் தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement