வாலிபருக்கு கத்திக்குத்து இருவர் கைது
அனுப்பர்பாளையம்:திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர், திருநகரை சேர்ந்தவர் மோகன்குமார், 31. ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.
மோகன்குமார் மனைவி சுசீலா, நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள மின்விளக்குகளை 'ஆன்' செய்தார். அப்போது, அதே காம்பவுண்டில் வசித்து வரும் ஜேம்ஸ், என்பவர் 'ஏன் இந்த நேரத்தில் லைட் போடுகிறீர்கள்,' என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனை மோகன்குமார் கேட்டதற்கு, ஆவேசமடைந்த ஜேம்ஸ், அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த மோகன்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அனுப்பர்பாளையம் போலீசார் ஜேம்ஸ், 35 மற்றும் அவரது நண்பர் பாக்கியராஜ், 32, ஆகியோரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!