Load Image
Advertisement

கொங்கு மெட்ரிக் பள்ளி 100 சத தேர்ச்சி சாதனை

Kongu Matric School 100 percent pass record    கொங்கு மெட்ரிக் பள்ளி 100 சத தேர்ச்சி சாதனை
ADVERTISEMENT
திருப்பூர்:ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

மாணவி தரணிகா, 489 மதிப்பெண் பெற்று முதலிடம், ஆஷா ெஹலீனா, மகாலட்சுமி, மாணவர்கள் உதின், சஞ்சய் ஆகிய நான்கு பேரும் தலா, 488 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம். மாணவர் மதன்பாலாஜி, 487 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம். கணிதத்தில் மூன்று பேரும், சமூக அறிவியலில் ஒருவரும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகளுக்கான 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது, பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கில வழிக்கல்வியில், 490ம், அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, 100 சதவீதம், 486 - 489 மதிப்பெண் எடுத்தால், 75 சதவீதம், 480 - 485 எடுத்தவர்களுக்கு, 50 சதவீதம், 470 - 479 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, 25 சதவீதம்.

அதே போல் தமிழ் வழிக்கல்வியில், 481க்கு அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, நுாறு சதவீதம், 476 - 480 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, 75 சதவீதம், 470 - 475 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, 50 சதவீதம், 460 - 469 வரை மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, 25 சதவீதம் என கட்டண சலுகையை பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேர்வில் சாதித்த மாணவர்களை பள்ளியின் தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் சந்திர சேகர், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement