Load Image
Advertisement

போலி கல்வி உதவித்தொகை விளம்பரம் நம்பி ஏமாற வேண்டாமென அட்வைஸ்

கோவை:மத்திய, மாநில அரசுகளின் கீழ் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை திட்டங்கள், இயக்குனரகத்தில் இருந்து, உரிய பள்ளிகள் வழியாக, மாணவர்களுக்கு தெரிவிப்பதால், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாமென, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு, உரிய மாணவரின் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, அதில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு தகுதியானவர்களை பள்ளிகளே கண்டறிந்து, இயக்குனரகத்திற்கு பட்டியல் அனுப்பப்படும்.

இதுதவிர, பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் போது, சில தன்னார்வல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்குவது வழக்கம்.

ஆனால், சமீபகாலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில், 80 சதவீத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜனாதிபதி அப்துல்கலாம் பெயர்களில் கல்வி உதவித்தொகை இருப்பதாக, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.

இத்திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்ததாகவும், பலருக்கு பகிர்ந்தால், தகுதியுள்ளோர் பயனடைவர் எனவும் குறிப்பிடுவதால், பலரும் நம்பி, விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும் என தெரியாமல், அலைகழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கல்வி அலுவலர் எச்சரிக்கை

மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியராஜசேகரன் கூறுகையில், ''பல தன்னார்வ அமைப்புகள், கல்வித்துறையில் இருந்தே தகவல் பெற்று, தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவுகின்றன. சில அமைப்புகள் நேரடியாக மாணவர்களை கண்டறிந்து உதவி செய்கின்றன. இதுபோன்ற அமைப்புகள், மாணவர்களை நேரடியாக தொடர்பு கொள்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பித்து, பெற்று தரப்படுகிறது. எனவே, சமூக ஊடங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்,'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement