சமூக ஆர்வலரை கொல்ல முயற்சி6 மாதத்துக்கு பின், ஒருவர் கைது
திருப்பூர்:காங்கயம் அருகே சமூக ஆர்வலர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காங்கயம், நத்தக்காடையூரை சேர்ந்தவர் செந்தில்குமார், 49. சமூக ஆர்வலரான இவர் கடந்தாண்டு, டிச., 16ம் தேதி நத்தக்காடையூர் ரோட்டில் காரில் சென்றார். மாந்தோப்பு ஐவர் ராஜாக்கள் கோவில் அருகே கார் வந்த போது, டிப்பர் லாரியில் வந்த இருவர், செந்தில்குமாரின் கார் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் காயமடைந்த செந்தில்குமாரை அவர்கள் மீண்டும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தனர். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், தொடர்புடைய தேனி மாவட்டம், மயிலளிப்பட்டியைச் சேர்ந்த மயில்ராஜ், 41, என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!