நமக்கு நாமே திட்டத்தில் நிதி
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு, மங்கலம் ரோட்டில் வீனஸ் கார்டன்ஸ் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.பிரதான ரோட்டிலிருந்து இப்பகுதிக்கு தார் ரோடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக உள்ளது. இங்கு 45 லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் உள்ளோர் தங்கள் பங்களிப்பை திரட்டினர். அவ்வகையில், இப்பணிக்கான மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு என 15 லட்சம் ரூபாய் நிதிக்கான வரைவோலைகள், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வீனஸ் கார்டன் பகுதி கட்டட உரிமையாளர்கள் இதை நேற்று வழங்கினர்.வார்டு கவுன்சிலர்கள், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!