இந்த அழகான ஓவியங்கள் மீது இனி போஸ்டர் ஓட்டுவீங்க?
கோவை;அவிநாசி ரோடு மேம்பால துாண்களில் வரையப்பட்டுள்ள வரிக்குதிரை, குருவி உள்ளிட்ட வன விலங்குகளின் ஓவியங்கள் பார்ப்போரை கவர வைக்கின்றன.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலக கட்டட சுவர்கள், மேம்பால துாண்கள் உள்ளிட்டவற்றில் தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியினரின் துதி பாடும் போஸ்டர்கள் விதிமீறி ஒட்டப்படுகின்றன. அவ்வாறு ஒட்டினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் விதிமீறல் தொடர்கதையாக இருக்கிறது. இதை தடுக்க காந்திபுரம், அவிநாசி ரோடு மேம்பாலங்களின் துாண்கள், லங்கா கார்னர் ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அவிநாசி ரோடு மேம்பாலத்தில், புரூக்பீல்ட் செல்லும் வழியில் உள்ள துாண்களில், வரையப்பட்டிருந்த வன விலங்குகளின் ஓவியங்கள் பார்ப்போரை பிரம்மிக்க வைக்கிறது.
மரக்கிளையில் பறவைகள் அமர்ந்திருத்தல், வரிக்குதிரைகள் தண்ணீர் குடிப்பது, பச்சை கிளிகள், பூக்கள் உள்ளிட்ட ஓவியங்கள், அச்சு அசலாக காட்சியளிக்கின்றன.
போஸ்டர் வழக்கமாக ஒட்டப்படும் மற்ற இடங்களிலும் ஓவியங்களால் அழகூட்டினால் 'ஸ்மார்ட் சிட்டி'க்கு அந்தஸ்தும் கூடும்; போஸ்டர் கலாசாரமும் ஒழியும்.
இது, மாநகராட்சியின் கையில்தான் இருக்கிறது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!