நமக்கு நாமே திட்டம் ஈசா கார்மென்ட்ஸ் தாராளம்
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில், 73 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பங்களிப்பாக ஈசா கார்மென்ட்ஸ் நிறுவனம் 36.50 லட்சம் ரூபாய் வழங்கியது.
அதே போல் பள்ளி சுற்றுப்பகுதியில் உள்ள, 3 குறுக்கு வீதிகளில் 9.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் வடிகால் கட்டும் பணிக்கு 3.04 லட்சம் ரூபாய், பள்ளியில் கழிப்பிடம் கட்ட, 6 லட்சம் ரூபாய், டூம் லைட் மைதானம் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கும் பணிக்கு, 1.30 லட்சம் ரூபாய் என ஈசா கார்மென்ட்ஸ் நிறுவனம் பங்களிப்பு வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை, அதன் நிர்வாக இயக்குநர் சாதிக் அலி, மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!