Load Image
Advertisement

இந்தியாவிலே சிறந்த சுற்றுலாத்தலமாக தமிழ்நாடு அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்

கொடைக்கானல்:இந்தியாவில் சிறந்த சுற்றுலாத்தலமாக தமிழ்நாடு விளங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார்.

கொடைக்கானலில் துவங்கிய கோடை விழாவில் அவர் பேசியதாவது : இந்தியாவில் தமிழ்நாடு, ஏராளமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கி உள்ளதால் சிறப்பு பெற்றுள்ளது. அதிகளவு பயணிகள் வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கொடைக்கானல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள், கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் அடி உயரம் கொண்ட சிறப்பு உள்ளது.

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த 6 இடங்களுக்கு மேல் ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

இங்குள்ள மன்னவனுாரில் ரூ.3.75 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மேல்மலை பகுதியில் உள்ள கிளாவரை மூணாறு ரோடு 5 கி.மீ., அமையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வர முடியும். இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2022ல் 55 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர்.

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் ஓராண்டுக்குள் துவக்கப்படும். அதுபோல் ரோப் கார் திட்டமும் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பழநி,- திருப்பதி இடையே தற்போது இயக்கப்படும் வால்வோ பஸ்களுடன், மேலும் இரண்டு பஸ்கள் இயக்கப்படும், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement