Load Image
Advertisement

அடுக்குமாடி குடியிருப்புக்கு அரசு கேபிள் இணைப்பு ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

Govt cable connection operators protest at flats    அடுக்குமாடி குடியிருப்புக்கு அரசு கேபிள் இணைப்பு ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அரசு 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:

அறிவொளி நகர் மற்றும் வீரபாண்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, அரசு கேபிள் இணைப்பு வழங்க நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் அனுமதி கேட்டோம்; ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.

புதிய ஆபரேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் தலைமையிலானோர், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கப்பட்ட அரசு கேபிள் டிவி ஒயர்களை துண்டித்து விட்டனர்.

வீடுகளுக்கு தற்போது தனியார் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கியுள்ளனர். இதனால், அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கேபிள் டிவி தாசில்தார் ரவீந்திரன் கூறுகையில், ''குடிசை மாற்றுவாரியத்திடம் தனியே அனுமதி பெற்ற ஆபரேட்டர்கள் மட்டுமே, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு கேபிள் டிவி இணைப்பு வழங்கமுடியும். வாரியம் நிர்ணயித்துள்ள டெபாசிட் தொகையும் செலுத்தவேண்டும். இதுகுறித்து அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement