பழநி கோயிலில் பிரேக் தரிசனம் பக்தர்கள் ஆலோசனை கூறலாம்
பழநி:பழநி மலை முருகன் கோயிலில் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய இடைநிறுத்த (பிரேக்) தரிசனம் அறிமுகம் செய்வது குறித்து பொதுமக்கள் ஆலோசனை, ஆட்சேபம் கேட்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பழநி மலை முருகன் கோயிலுக்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கை குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் எளிதில் தரிசனம் செய்ய ரூ.10 , ரூ.100 கட்டண வழி வசதி உள்ளது.
இந்நிலையில் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பின்படி தினமும் மதியம் 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இடைநிறுத்த (பிரேக்) தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 300 கட்டணம். இந்த கட்டணத்தில் தரிசனம், பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், விபூதியுடன் மஞ்சப்பை வழங்கப்படும்.
தமிழ்புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கில வருட பிறப்பு, தை 1 முதல் 5 தேதி வரை, தைப்பூச திருவிழாவில் 10 நாட்கள், பங்குனி உத்திர திருவிழாவில் 10 நாட்கள்,மாதாந்திர கார்த்திகை திருவிழா 13 நாட்கள் என 44 நாட்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது.
இத்திட்டம் குறித்து பொதுமக்கள் ஆட்சேபம், ஆலோசனையை ஜூன் 16 க்குள் தெரிவிக்க கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!