மருத்துவமனையில் அட்மிட்டாக தயாராகும் தி.மு.க.,வினர்
கரூர்:வழக்கு பாயும் என்பதால் கரூரை சேர்ந்த தி.மு.க., பிரமுகர்கள், மருத்துவமனைகளில் அட்மிட்டாக தயாராகி வருகின்றனர்
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். அதில், வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் காயத்திரி உள்பட, நான்கு பேர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், அரசு துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தால் கைது நடவடிக்கை இருக்கும் என, கருதி தாக்குதலில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களை தாக்கியதாக கூறி, தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாக தயாராகி வருகின்றனர்.
கரூரில், சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பலர், நேற்றிரவு கரூர், நாமக்கல்லில் உள்ள பல ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இன்று, மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்போடு, சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த ரவுடிகளை மத்திய படைகளை கொண்டு என்கவுண்டர் செய்ய வேண்டும்.....