Load Image
Advertisement

உணவு பொருட்களை குதறிய பெருச்சாளிகள் அப்புறப்படுத்த பெற்றோர் வேண்டுகோள்

Parents request to dispose of peruchali who are digging food items    உணவு பொருட்களை குதறிய பெருச்சாளிகள் அப்புறப்படுத்த பெற்றோர் வேண்டுகோள்
ADVERTISEMENT
திருப்பூர்:விடுமுறைக்காக மூடிய அங்கன்வாடி மையங்களில் புகுந்த பெருச்சாளிகள் அங்கிருந்த பொருட்களை ருசி பார்த்து, மூட்டைகளை சேதப் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாநகராட்சி பகுதியில் ஏராளமான அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. கோடை விடுமுறைக்காக இந்த மையங்கள் கடந்த இரு வாரங்களாக இயங்காமல் மூடப்பட்டிருந்தன.

விடுமுறை முடிந்து மையங்கள் திறந்து செயல்பட அறிவுறுத்தப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக மைய ஊழியர்கள் இவற்றை திறந்து சுத்தம் செய்து, தயார் படுத்தும் பணியைத் துவங்கினர்.

அவ்வகையில் பாரப்பாளையம் பகுதியில் உள்ள மையத்தை ஊழியர்கள் திறந்து சுத்தப்படுத்த முயன்றனர்.

அப்போது அங்கு மையத்தில் வைத்திருந்த சத்து மாவு பாக்கெட்டுகள் பெருச்சாளிகள் வேட்டைக்கு இரையாகியிருந்தது தெரிந்தது. மேலும், அங்குள்ள சாக்கு மூட்டைகளும் பெருச்சாளிகளால் கடித்து குதறி சேதப்படுத்திய நிலையில் காணப்பட்டது.

பெருச்சாளிகள் சேதப்படுத்திய பொருட்களை ஊழியர்கள் அப்புறப் படுத்தி மையத்தை சுத்தப்படுத்தினர். அங்கன்வாடி மையத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பெருச்சாளிகளால் சேதப்படுத்திய சத்துமாவு பாக்கெட்கள், உணவு பொருள் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டுமென, என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement