Load Image
Advertisement

இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் அதிகரித்துள்ளது : ரஷ்ய தூதரக அதிகாரி ஓலேக் அவ்தீவ் பேச்சு

 Trade between India and Russia has increased, says Russian Ambassador Oleg Avdiyev    இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் அதிகரித்துள்ளது : ரஷ்ய தூதரக அதிகாரி ஓலேக் அவ்தீவ் பேச்சு
ADVERTISEMENT
கோவை:இந்தியா - ரஷ்யா தொழில் மேம்பாடு குறித்த கருத்தரங்கு, கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் நேற்று நடந்தது.

கருத்தரங்கில் தென்னிந்தியாவின் ரஷ்ய துணை தூதர் ஓலேக் அவ்தீவ் பேசுகையில், ''இந்தியா - ரஷ்யா இடையே வர்த்தகம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது போல, ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது.

தொழில் வர்த்தகத்தில் போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி, பண பரிமாற்றம் உள்ளிட்டவைகளில் உள்ள இடர்பாடுகளை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை அருகே கடல்வழி பயணத்திற்கு, புதிதாக ஒரு முனையத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தால், செலவினங்கள் குறைந்து ஏற்றுமதி - இறக்குமதி வேகமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் அடையும்,'' என்றார்.

கருத்தரங்கில், இந்தியா ரஷ்யா தொழில் வர்த்தக சபையின் துணை தலைவர் வீரமணி, ரஷ்யா - இந்தியா தொழில் வர்த்தக சபை பொதுசெயலாளர் தங்கப்பன், இந்திய தெழில் வர்த்தக சபை கோவை தலைவர் ஸ்ரீ ராமுலு, துணை தலைவர் சுந்தரம், செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement