Load Image
Advertisement

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கு கோவையில் 18 மையங்கள்

கோவை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால், வரும், 28ல் (ஞாயிற்றுக்கிழமை) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு - 2023, கோவை மாவட்டத்தில், 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது; 7,742 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், மிகுந்த கவனத்துடன் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படுகிறது.

கலெக்டர் தலைமையில், துணை கலெக்டர்கள் அந்தஸ்தில், 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், 18 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு ஆய்வு அலுவலர்கள், துணை தாசில்தார்கள் நிலையில், 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும், 682 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நடத்துவதை பர்வையிட, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை இயக்குனர் அந்தஸ்தில் ஒருவர், மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவர் ஆய்வு செய்வதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையத்தில் மொபைல் போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன; தடையில்லா மின் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் நுழைவுச்சீட்டுடன் தேர்வு துவங்குவதற்கு, ஒரு மணி நேரத்துக்கு முன் வர வேண்டும். தேர்வு துவங்குவதற்கு, 10 நிமிடத்துக்கு முன், வாயில் கதவு மூடப்படும்.

மொபைல் போன், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் எடுத்து வரக்கூடாது. கருப்பு பால் பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

யு.பி.எஸ்.சி., இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டுடன் உள்ள தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட போன்ற மத்திய - மாநில அரசுகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று எடுத்து வர வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement