லேபர் கோர்ட்டிற்கு புதிய நீதிபதி நியமனம்
கோவை:கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும், முதன்மை லேபர் கோர்ட் நீதிபதி பணியிடம், நீண்ட காலமாக காலியாக இருந்தது.இக்கோர்ட்டிற்கு, ஈரோடு மாவட்டம், பவானி, நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி லதா நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் மற்றும் சி.ஜே.எம்., கோர்ட் நீதிபதி முருகன், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது, சேலம் லேபர் கோர்ட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!