சாப்பிட்டு காசு தராதவர் கொலை ஓட்டல் உரிமையாளர் கைது
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் ஆத்துாரில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காத நபரை அடித்து கொலை செய்த ஓட்டல் உரிமையாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்துார் அருகே மேலாத்துார் ஏ.டி.எம்., மையம் அருகில் மே 24ல் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தது ஓட்டல் உரிமையாளர் மோசஸ் அமல்ராஜ், ஊழியர் காயல்பட்டினம் முகமது தாஹா 25, என தெரியவந்தது.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராததால் ஆத்திரத்தில் இருவரும் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். ஆத்துார் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இறந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!