ADVERTISEMENT
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் 8-வது நிர்வாக கவுன்சில்கூட்டம் இன்று துவங்குகிறது. மூன்று மாநில முதல்வர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2014-ல் பா.ஜ. ஆட்சிக்கு வந்தவுடன் , நாட்டில் அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிடிஆயோக அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பான இந்த அமைப்பின் உயரிய அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் எட்டாவது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே.27) நடக்கிறது. இதில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பர் என தெரிகிறது.
மூன்று முதல்வர்கள் புறக்கணிப்பு
இந்நிலையில் இக்கூட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி கெஜ்ரிவால் ஆகியோர் புறக்கணிக்கப்போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்நேரம், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (4)
மூன்று முதல்வர்கள் நீங்கள் உங்கள் மாநில மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும் ஆனால் நீங்கள் என்னதான் தலைகீழாக நின்று மரணமுயற்சி எடு த்தாலும் மோடி தவிர யாரும் பிரதமர் ஆகா முடியாது
மூவரும் பிரதமர் வேட்பாளர்கள்
தமிழக முதல்வர் கொள்ளையடித்ததை வெளிநாடுகளில் முதலீடு செய்யச் சென்றுள்ளதால் அவர் விடுப்புக் கடிதம் கொடுத்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஹா ஹா முன்னேறு வருங்கால பிரதமர்களும் புறக்கணிக்க போகிறார்களா?? ஆசை யாரை விட்டது ??