ADVERTISEMENT
கோவை:மின்னணு பொருட்கள் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தியில் சிறந்து விளங்கும், சிர்மா எஸ்.ஜி.எஸ்., நிறுவனத்துடன், கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஒப்பந்தத்தின் சிறப்பம்சமாக, சிர்மா எஸ்.ஜி.எஸ்., நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் வடிவமைத்தல் மற்றும் மேம்பாட்டிற்கான மையம், ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நிறுவப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
இதில் சிர்மா எஸ்.ஜி.எஸ்., நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் பேசுகையில், ''மின்னணு வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி துறையின் உலகளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அடுத்து ஐந்து முதல் பத்தாண்டுகளில், மின்னணு பொருட்கள் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தியில் உலகளவில் இந்தியா ஒரு முன்னணி நாடாகத் திகழும்,'' என தெரிவித்தார்.
சிர்மா எஸ்.ஜி.எஸ்., நிறுவனத்தின் வடிவமைத்தல் மற்றும் மேம்பாட்டுத் துறை தலைவர் ஜான் டென்னிஸ், மனிதவள மேம்பாட்டுத்துறை உப தலைவர் சத்ய நாராயணன், கல்லுாரியின் இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா,தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன் ஆகியோர்கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!