Load Image
Advertisement

ரூ.40 கோடி புன்செய்நிலம் மீட்பு மகிழ்ச்சிக்கடலில் பக்தர்கள்

Devotees in the happy ocean of Rs.40 crore Bunsey land recovery    ரூ.40 கோடி புன்செய்நிலம் மீட்பு மகிழ்ச்சிக்கடலில் பக்தர்கள்
ADVERTISEMENT
கோவை:கோவையிலுள்ள சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள புன்செய் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

கோவையை அடுத்த தெலுங்குபாளையம் கிராமத்தில் சென்றாய பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவிலுக்கு சொந்தமாக, 5.40 ஏக்கர் பரப்பளவில் தெலுங்குபாளையம் கிராமத்தில் 5.40 ஏக்கர் புன்செய் நிலம் இருந்தது.

இந்நிலத்தை இரு தனிநபர்கள் ஆக்கிரமித்திருந்தனர். ஆரம்பகாலத்தில் விவசாயம் செய்து வந்தனர். பின்னர் விவசாயத்தை கைவிட்டு, தரிசாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இச்சூழலில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வந்தது.

அதன் முடிவில் நிலத்தை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் நிலம் ஒப்படைக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டது.

இதையடுத்து, இணை கமிஷனர் பரஞ்ஜோதி, உதவிகமிஷனர் கருணாநிதி ஆகியோர் அறிவுறுத்தலின் படி, நேற்று நிலம் கோவில் சுவாதீனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வருவாய்த்துறையினர், போலீசார், ஹிந்துசமய அறநிலையத்துறையினர் இணைந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும் பணியில் இறங்கினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement