12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கோடை வெயில் தாக்கத்தால், நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, வேலுார், திருத்தணி, சென்னை மீனம்பாக்கத்தில், 41 டிகிரி செல்ஷியஸ்; அதாவது, 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, புதுச்சேரி, 40; தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நாகை, கடலுார், பரங்கிப்பேட்டை, 39; ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், துாத்துக்குடி மற்றும் காரைக்காலில், 38 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 100 டிகிரி வெப்பநிலையை தாண்டி பதிவானது.
கடந்த, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, சூளகிரியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. சின்னார் அணை, 6; வரட்டுப்பள்ளம், 4; குன்றத்துார், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
முன்னறிவிப்பு
தென் மாநிலங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
கேரள கடலோரம், லட்சத்தீவு பகுதிகளில், இன்றும், நாளையும்; வடக்கு கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்றும்; தெற்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளையும் சூறாவளி வீசும்.
தெற்கு கடலோர பகுதிகள் மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், வரும், 28, 29ம் தேதிகளிலும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!