Load Image
Advertisement

பெங்களூரு உதய் சூப்பர் பாஸ்ட்எர்ணாகுளம் ரயில் இயக்கம் மாற்றம் 

திருப்பூர்:பெங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் புதிய சரக்கு ரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால், உதய், இன்டர்சிட்டி ரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, எர்ணகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) நாளை (28ம் தேதி), 29 மற்றும் 30ம் தேதி மூன்று நாட்கள் சேலம் வரை மட்டும் இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர், பெங்களூரு ஸ்டேஷன்களுக்கு செல்லாது. மறுமார்க்கமாக, 29, 30, 31ம் தேதி, பெங்களூருவுக்கு பதில், சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.

கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) கிருஷ்ணராஜபுரம் வரை மட்டும் இயக்கப்படும்; பெங்களூரு செல்லாது. வரும், 31ம் தேதி, கோவை - லோகமான்யதிலக் (மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11014) தர்மபுரி, ஓசூர், பெங்களூரு ஸ்டேஷன்களுக்கு பதில், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக, ஏலங்கா ஸ்டேஷன் செல்லும், என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement