Load Image
Advertisement

பி.ஏ.பி., வாய்க்காலில், சீமை கருவேலமரங்கள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

Farmers urged to remove sessile oak trees in Vaikal, P.A.B    பி.ஏ.பி., வாய்க்காலில், சீமை கருவேலமரங்கள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADVERTISEMENT
திருப்பூர்:திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப்-கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது.

சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், விவசாயிகள், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி:

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பிடத்தில் துாய்மை பணி மேற்கொள்வது இல்லை. பயணிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. கழிப்பிட பயன்பாட்டுக்கான கட்டணம் வசூலிக்க, ரசீது எண், மாநகராட்சி முத்திரை ஏதுமில்லாத ரசீது பயன்படுத்தப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி அன்பரசு:

பொங்கலுார் ஒன்றியம், வாவிபாளையத்திலிருந்து கோட்டாபாளையம் வரை, இடைப்பட்ட துாரத்துக்கு பி.ஏ.பி., வாய்க்காலில் சீமை கருவேலமரம் உள்ளிட்ட முட்செடிகள் வளர்ந்துள்ளன; திறக்கப்படும் தண்ணீர், மிக குறைவாகவே பாசனத்துக்கு வந்து சேர்கிறது. வாய்க்காலின் இருபுறமும் சூழ்ந்துள்ள முள் மரங்கள், செடிகளை அகற்ற வேண்டும்.

'கோட்டபாளையம் ஊராட்சியில் மரங்களை அகற்றுவதற்கு போதிய நிதி இல்லை. பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள மரங்களை அகற்றுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாடியுள்ளோம்' என, பொங்கலுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளித்தார்.

சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:

பி.ஏ.பி., பல்லடம் விரிவாக்க வாய்க்கால், கிளை வாய்க்கால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பூமலுார் கிராமத்தில் சேதப்படுத்திய வாய்க்காலை, 400 அடி நீளத்துக்கு கான்கிரீட் வாய்க்காலாக அமைத்து தரவேண்டும்.

விவசாயி சேகர்:

பல்லடம் தாலுகா கரைப்புதுார் கிராமம், அய்யம்பாளையம் ஸ்ரீ நகரில், ஒன்பது ஏக்கரில் வீட்டுமனை உருவாக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததால், வீட்டு கழிவுநீர், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாழ்படுத்துகிறது.

பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன்:

திருப்பூர் மாநகர பகுதிக்குள் தடை செய்யப்பட்ட நேரத்தில் இயங்கும் கனரக வாகனங்களால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலையில் ஓட தகுதியில்லாத, முறையான ஆவணங்கள் இல்லாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து, உரிமையாளர், ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். செட்டிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement