Load Image
Advertisement

கள்ளச்சாராயம், போலி மதுதகவல் தர விழிப்புணர்வு

 Counterfeit Liquor, Counterfeit Liquor Quality Awareness    கள்ளச்சாராயம், போலி மதுதகவல் தர விழிப்புணர்வு
ADVERTISEMENT
திருப்பூர்:கள்ளச்சாராயம், போலி மது போன்றவற்றின் விற்பனை குறித்து தகவல் அளிக்க போலீசார் வாட்ஸ் ஆப் எண் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில், கள்ளச்சாராயம் அருந்திய, 23 பேர் உயிரிழந்தனர். அதன்பின், 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் விற்ற மது வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், போலீசார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், திருப்பூர் மாநகர போலீஸ் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ் ஆப் எண் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், 94882 94941 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு, கள்ள சாராயம், போலி மது, சட்ட விரோத மது விற்பனை ஆகியன குறித்து தகவல் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிவிப்பு பேனர், திருப்பூர் நகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement