இருப்பதோ, 364 சீட்; 3,000 பேர் விண்ணப்பம்! அவிநாசி அரசு கல்லுாரிக்கு அதிகரிக்குது மவுசு
அவிநாசி:அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில் இணைய மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது; நடப்பாண்டு, 3,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.
அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், பி.காம்., உட்பட ஏழு பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தம், 364 பேருக்கு 'சீட்' வழங்கப்பட உள்ளது. இணைய வழியாக மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 3,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், பி.காம்., பாடத்தில் இணைவதற்கு மட்டும், 1,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.காம்., சர்வதேச வணிகவியல் பாடத்தில் இணைய, 729 பேர், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் இணைய, 1,000 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து, கல்லுாரி முதல்வர் நளதம் அறிக்கை:வரும், 30ம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், என்.சி.சி., விளையாட்டுப்பிரிவு மாணவர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபர் சார்ந்த தமிழ் மாணவர்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்படும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான முதல்கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம், 5ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி., வேதியியல் பாடப்பிரிவுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
வரும், 6ம் தேதி, பி.காம்., பி.காம்.,- சி.ஏ., பி.காம்., - சர்வதேச வணிகம் பாடப்பிரிவுகளுக்கும், அடுத்த மாதம், 7ம் தேதி, பி.ஏ., பொருளாதாரம், பி.ஏ., ஆங்கில பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இணைய வழி விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றின், தலா, 2 நகல், 2 போட்டோ மற்றும் கல்லுாரி கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!