Load Image
Advertisement

வண்டல் மண் அள்ள அனுமதி: விவசாயிகள் வேண்டுகோள்

திருப்பூர்:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தில், குளங்களுக்கு தண்ணீர் விடும் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமா நல்லுார், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலுார், மேற்குபதி, சொக்கனுார், பட்டம்பாளையம் ஆகிய 10 ஊராட்சிகளில், குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரப்போகிறது.

எனவே, குளங்களில், சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. இது கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும் நேற்று எதிரொலித்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி கூறியதாவது:

குளம், குட்டைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, குளத்தை துார்வாரினால் மட்டுமே, அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடுதல் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீரை செறிவூட்ட முடியும். எனவே, சீமைக்கருவேல முட்களை அகற்ற வேண்டும்.

தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். காளம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம், மிகவும் பழுதடைந்துள்ளது; புதிய கடை கட்டிக்கொடுக்க வேண்டும். தற்காலிகமாக, இ-சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தேசிய வேலை உறுதி திட்டத்தில், புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement