கலெக்டர் ஆபீஸ் வாட்ஸ் அப் புகார் எண் உயிர் பெற்றது!
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகள், பிரச்னைகளை இன்றுமுதல் அனுப்பலாம்.
மாவட்டத்தில் உள்ள கடைக்கோடியில் உள்ள மக்களும், தங்கள் பிரச்னைகள், கோரிக்கைகளை சுலபமாக தெரிவிக்கும்வகையில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாட்ஸ் அப் சேவை செயல்படுத்தப்பட்டுவந்தது. இதற்காக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 97000 41114 என்கிற வாட்ஸ் அப் எண் பயன்படுத்தப்பட்டு வந்தது.
சில மாதங்களாக, கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 22ம் தேதி குறைகேட்பு கூட்டத்தில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில், வாட்ஸ் அப் சேவையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே, கலெக்டர் கிறிஸ்துராஜ், வாட்ஸ் அப் சேவையை துவக்க உத்தரவிட்டார்.
இதனால், 97000 41114 என்கிற வாட்ஸ் அப் புகார் எண் இன்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை, இந்த எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
பொதுமக்கள் அனுப்பும் புகார்கள், கோரிக்கைகள் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்களால் பதிவு செய்யப்படும்; மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும்.
'வாட்ஸ்அப்' புகார்தானே என அலட்சியம்காட்டாமல், பொதுமக்கள் அனுப்பும் குறைகளை பரிசீலித்து, துரித நடவடிக்கை எடுத்து, இந்த சேவையை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!