Load Image
Advertisement

கடன் விவகாரம் ஒருவர் கைது

பல்லடம்;கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக் கிய ஒருவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்த ஆதித்தன் மகன் கார்த்தி, 32. அவிநாசி அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். ஏற்கனவே, அருள்புரம் அடுத்த பாச்சாங்காட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, செல்வி என்பவருக்கு, 10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.

பணத்தை திருப்பித் தருமாறு கேட்டும் செல்வி தராததால், அவரது கணவர் பாரதி கண்ணனிடம் கேட்டுள்ளார். பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி, பாரதி கண்ணன் - கார்த்தி இடையே தகராறு ஏற்பட்டதில், காயமடைந்த கார்த்தி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பாரதி கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement