ஆவினை காட்டிலும் தனியார் கூடுதல் விலை
பொங்கலுார்:விவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு செலவு மிகுந்ததாக மாறி வருகிறது. இளைஞர்கள் மாடு வளர்ப்பதை கவுரவ குறைச்சலாக கருதுகின்றனர். இதனால், பால் உற்பத்தி குறைந்து வருகிறது.
பல விவசாயிகள் ஆவினில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆவின் நிறுவனம் கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் பல கட்டங்களாக போராடி வந்தனர்.
ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் பால் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக பால் விற்பனை விலையை குறைத்தது. இது அந்த நிறுவனத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
தற்போது ஆவினை விட தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு, 1.5 ரூபாய் கூடுதலாக வழங்குகின்றன. தனியார் நிறுவனங்களை விட ஆவின் குறைவாக கொடுப்பதால் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'பருத்திக்கொட்டை, 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 2,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு நாள் கூலி, 12 மணி நேர வேலைக்கு ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், மாடு வளர்ப்பவர்களுக்கு ஒரு மாட்டுக்கு, ஒரு நாளைக்கு நுாறு ரூபாய் கிடைப்பதே சிரமமாக உள்ளது.
ஆவின் நிறுவனம் விலையை உயர்த்தாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நிறுவனங்கள் ஆவினை விழுங்கி விடும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!