ADVERTISEMENT
பல்லடம்:பல்லடம் அருகே, பண்ணை அமைத்து தெரு நாய்கள் அச்சுறுத்தி வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர், குருவாயூரப்பன் நகர், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்து, 500க்கும் ஏற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
வீடுகள் அதிகம் உள்ள எங்கள் பகுதிகளில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்ணை போல் அமைத்து தெரு நாய்கள் கூட்டாக வசித்து வருகின்றன. அவ்வப்போது கூட்டமாக திரியும் தெரு நாய்களால், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாய்கள், ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொள்வதால், தெருவில் விளையாடும் சிறுவர்கள், கடைக்குச் செல்லும் பெண்கள் ஆகியோர் நாய்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக, நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால், இங்குள்ள மக்கள் தொகைக்கு இணையாக நாய்களும் பல்கி பெருகிவிடும். எனவே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!