தி.மு.க., உறுப்பினர் சேர்ப்பில் மாநகராட்சி ஊழியர்கள்
சென்னை:தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணியில், கடலுார் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுாரில் ஆளும் தி.மு.க.,வுக்கு உறுப்பினர்கள் சேர்க்க, மாநகராட்சி பணியாளர்களை பயன்படுத்தியுள்ளனர். மாநகரின் பல பகுதிகளில் வீடு வீடாக சென்று, அங்குள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளின் நகல்களை வாங்கி சென்றுள்ளனர்.
தி.மு.க., உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தான் தங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், மக்களிடம் சேகரித்த வாக்காளர் அடையாள அட்டை நகல்களை, அக்கட்சியிடம் ஒப்படைத்து விடுவோம் என, மாநகராட்சி பணியாளர்கள் கூறியுள்ளனர். இது, அப்பட்டமான அதிகார அத்துமீறல்.
மாநகராட்சியில் செய்ய வேண்டி பணிகள் ஏராளமாக உள்ளன. பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுத்த மக்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் அலைகின்றனர். அதற்கு தீர்வு காணாத மாநகராட்சி, தி.மு.க.,வுக்கு உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
அரசு இயந்திரமும், மக்களின் வரிப்பணமும் தவறாக பயன்படுத்தப்படுவதை, தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
இது குறித்து விசாரணை நடத்தி, மேயர், ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!