Load Image
Advertisement

கும்பகோணம் கோயில் குளத்தை மீன் பண்ணையாக மாற்ற தடை

சென்னை:கும்பகோணம் தாலுகாவில் உள்ள கோவில் குளத்தை, மீன் பண்ணையாக பயன்படுத்த தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் தாலுகா, ஐவர்பாடி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி குருக்கள் என்பவர் தாக்கல் செய்த மனு:

ஐவர்பாடியில், அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலை நிறுவினர். கோவிலில் பூஜைகளை நான் செய்து வருகிறேன்.

இந்த கோவிலை, எங்களின் தனிப்பட்ட சொத்தாக அறிவித்து, 2002ல் அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவு குறித்து, அறநிலையத்துறை கமிஷனர் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணை, இன்னும் நிலுவையில் உள்ளது.

அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கும், விநாயகர் கோவிலுக்கும் இடையில், தந்தன்தோட்டத்தில் குளம் உள்ளது. கடவுளுக்கு அபிஷேகம் செய்வதற்கு, இந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்களும், குளத்தில் நீராடுவர்.

எங்கள் பராமரிப்பில் குளம் உள்ளது. குளத்தின் மீது, தந்தன்தோட்டம் பஞ்சாயத்து தலைவருக்கு உரிமை இல்லை. ஆனால், குளத்தை மீன் வளர்க்கும் பண்ணையாக மாற்றி உள்ளார். கழிவுகளையும், குளத்தில் கொட்டுகின்றனர். எனவே, கோவில் குளத்தை, மீன் பண்ணையாக மாற்றி குத்தகைக்கு விடவும், கழிவுகளை கொட்டவும், தடை விதிக்க வேண்டும். குளத்தின் பராமரிப்பு, கட்டுப்பாடு உரிமையில் குறுக்கிட, பஞ்சாயத்து தலைவருக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா, நீதிபதி மஞ்சுளா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மீன் பண்ணைக்கான குளமாக பயன்படுத்த தடை விதித்து, குளம் தொடர்பான விஷயத்தில், பஞ்சாயத்து தலைவர் குறுக்கிடக் கூடாது எனவும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement