Load Image
Advertisement

தமிழக போலீசில் பெண் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு நினைவுகூற மராத்தான் ஓட்டப்பந்தயம்

Marathon run to commemorate 50 years of women police being added to Tamil Nadu Police    தமிழக போலீசில் பெண் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு நினைவுகூற மராத்தான் ஓட்டப்பந்தயம்
ADVERTISEMENT
கோவை:கோவையில் போலீசாரின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, டி.ஜி.பி., சைலேந்திரபாபு வந்திருந்தார். முன்னதாக, போலீஸ் துறையில் பெண் போலீசார் சேர்க்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு பெண் போலீசார் கலந்து கொண்ட, 5 கி.மீ., மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இதனை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கொடியசைத்து துவங்கி வைத்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துவங்கிய மராத்தான் ஓட்டம் ரோஸ்கோர்ஸ், அண்ணா சிலை, டாக்டர் பாலசுந்தரம் ரோடு ஆகிய பகுதிகள் வழியாக, கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், சுஹாசினி, போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்டோர், பெண் போலீசாருடன் ஓடி வந்தனர்.

மராத்தானில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து, பெண் போலீசாரை கொண்டு கலவர கூட்டத்தை கலைக்கும் ஒத்திகை நிகழ்ச்சி டி.ஜி.பி., முன்னிலையில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கண்ணீர் புகை, லத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படைப்பிரிவுகளைக் சேர்ந்த பெண் போலீசார் செய்து காட்டினர். ஒத்திகையின் போது, கண்ணீர் புகை ட்ரோனை பெண் போலீசார் இயக்கி கலவர கூட்டத்தின் மத்தியில், துல்லியமாக கண்ணீர் புகையை வீசி காண்பித்தனர்.

போலீசில் சேர்க்கப்பட்டுள்ள பெண் போலீஸ் டிரைவர்கள் பஸ், ஐஷர், டெம்போ டிராவலர், 3 ஜீப்புகள் உட்பட 6 வாகனங்களை இயக்கி காட்டினர்.

அதனை டி.ஜிபி., கொடியசைத்து துவங்கி வைத்தார். சிறுவர்களோடும், போலீசார் குடும்பத்தோடும் கலந்துரையாடினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement