ADVERTISEMENT
செஞ்சி:சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், 1994ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் செஞ்சி தி.மு.க., நகர செயலாளராக இருந்தார். 2014ம் ஆண்டு மாவட்ட செயலாளர் பதவி வந்ததும், அவரது தம்பி வழக்கறிஞர் காஜா நஜீர் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார்.
காஜா நஜீரை நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, 3வது வார்டு கிளை செயலாளராக உள்ள கார்த்திக் நகர செயலாளராக நியமனம் செய்து அறிவிப்பை தி.மு.க,. தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. 3வது வார்டு கவுன்சிலராக உள்ள கார்த்திக், 2 முறை கவுன்சிலராக இருந்தவர்.
கார்த்திக் அமைச்சர் மஸ்தானின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!