ADVERTISEMENT
கோவை;கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'ஸ்மார்ட் ஆன்டெனா அமைப்புகள் மற்றும் அளவீடுகளுக்கான மையத்தின் திறப்பு விழா நடந்தது.
எம்.ஒ.டி.ஆர்.ஒ.பி., திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின், நிதி உதவி மூலம், இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூரு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, மையத்தை திறந்து வைத்தார்.
கல்லுாரியின் முதல்வர் அகிலா பேசுகையில், '' இந்த மையம், ஸ்மார்ட் ஆன்டனா அமைப்புகள் துறையில், புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும். சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வளங்களைக் கொண்டு, வயர்லெஸ் தகவல் தொடர்புகளில் வரம்பற்ற சாத்தியங்களை அறிவதற்கான வாய்ப்பை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதிய மையம் வழங்கும்,'' என்றார்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் இந்திரா உட்பட, பல்வேறு துறை தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!