கம்பெடுத்து ஆடலாம் சிலம்பம் கத்துக்கலாம்!
ஆதி கலைகளில் முக்கியமான கலை சிலம்பக்கலை. கோவையில் பல்வேறு அமைப்புகள் பள்ளி சிறுவர்- சிறுமிகளுக்கு சிலம்ப கலையை, கற்றுக்கொடுத்து வருகின்றன.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் கற்பகம் நிகர்நிலை பல்கலை சார்பில், 19வது தேசிய சிலம்பம் பயிற்சி பட்டறை, ஈச்சனாரி கற்பகம் நிகர்நிலை பல்கலையில் நடக்கிறது. சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ள குழந்தைகள், இந்த பயிற்சி பட்டறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பாக குத்து வரிசை, அலங்கார வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றைகம்பு வீச்சு, ஒற்றை சுருள்வாள் வீச்சு, இரட்டை சுருள்வாள் வீச்சு என, 13 வகையான பிரிவுகளுக்கு போட்டியின் விதிமுறை, எளிதில் புள்ளி பெறும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்படுகின்றன.
நடுவர்கள், பயிற்சியாளர்களுக்கும் பல்வேறு தகவல்கள் கற்றுத்தரப்படுகின்றன. இது போன்ற பாரம்பரிய கலைகள் அழியாமல் பாதுகாக்க, நம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!