Load Image
Advertisement

கொடையில் துவங்கியது மலர் கண்காட்சி, கோடை விழா மலர்கள், காய்கறிகளால் ஆன படைப்புகளை ரசித்த பயணிகள்

The flower fair, summer festival started at Godai where travelers enjoyed the creations made of flowers and vegetables    கொடையில் துவங்கியது  மலர் கண்காட்சி, கோடை விழா மலர்கள், காய்கறிகளால் ஆன படைப்புகளை ரசித்த பயணிகள்
ADVERTISEMENT
கொடைக்கானல்:கொடைக்கானலில் மலர் கண்காட்சி , கோடை விழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மலர்கள், காய்கறிகளால் ஆன படைப்புகளை பயணிகள் ரசித்தனர்.

கொடைக்கானல் பூங்காவில் 60 வது மலர் கண்காட்சி,கோடை விழா நேற்று தொடங்கியது. இதில் நாளை (மே 28) வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி , ஜூன் 2 வரை கோடை விழாவும் நடக்கின்றன. இதை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், சக்கரபாணி துவக்கி வைத்தனர். பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட மலர்கள், காய்கறிகளால் ஆன உருவங்கள், பல்வேறு துறைகளின் படைப்புகளை பார்வையிட்டனர். தொடர்ந்து கோடை விழாவில் கலை நிகழ்ச்சிகளையும் தொடங்கிவைத்தனர். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள் சாமி வரவேற்றார்.

எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார் (பழநி) காந்திராஜன் (வேடசந்துார்) சுற்றுலா பண்பாடு முதன்மைச் செயலர் மணிவாசன், வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி, சுற்றுலா இயக்குனர் சந்திப் நந்துாரி, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மேலாண்மை இயக்குனர் பிருந்தா தேவி, எம்.பி.,க்கள் ஜோதிமணி, வேலுச்சாமி கலந்து கொண்டனர். தோட்டக்கலைத்துறை சார்பாக ஒட்டக சிவிங்கி, வாத்து, பாண்டா கரடி, மலர் தொட்டி, கிரிக்கெட் வீரர் தோனி டி -ஷர்ட் உள்ளிட்டவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காய்கறிகளால் உருவாக்கப்பட்ட காட்டுமாடு, வரிக்குதிரை, டோரா, மயில், அணில், ஆகியவற்றை பார்வையர்கள் கண்டு ரசித்தனர். பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான சுற்றுலா பயணிகள் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement