Load Image
Advertisement

ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுக்க யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை பா.ஜ., பொதுச் செயலாளர் பேட்டி

No one needs to tell you to give importance to the President, BJP General Secretary Interview    ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுக்க  யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை  பா.ஜ.,  பொதுச் செயலாளர் பேட்டி
ADVERTISEMENT
பழநி:'' ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுக்க எங்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை'' என மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

பழநியில் அவர் கூறியது: அனைத்து நாடுகளுக்கும் தலைமை தாங்கக்கூடிய இந்தியாவை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வருகிறார். பா.ஜ., ஆட்சியின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவற்றை தமிழகத்தில் வீடு தோறும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்ய சிறப்பு செயற்குழு கூட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் விற்பனையை அதிகரிக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி குடிகாரர்களை ஊக்கப்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் இறந்தனர். இதனை திசை திருப்பும் எண்ணத்தில் சயனைடு பயன்படுத்தியதாக கூறுகின்றனர்.

ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகிறது. பார்லிமென்ட், சட்டசபை கட்டடங்கள் துவக்க விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து யாரும் பா.ஜ.,வுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. பா.ஜ., மட்டுமே சிறுபான்மை மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஜனாதிபதியாக்கி அழகு பார்த்துள்ளது, என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement