Load Image
Advertisement

அடுத்த தலைமுறையை அசர அடிக்கும் டாக்டர்!

''பணிகள் தொடர்ந்து சுறுசுறுப்பா நடக்குமான்னு பயப்படுறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''யாரு, எதுக்கு வே பயப்படுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
Latest Tamil News

''கூட்டுறவு துறையின் கீழ், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுது... இதுல, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்ல, கடன் வழங்குறதுலயும், கடன் வசூலை வரவு வைக்காமலும் பல மோசடிகள் நடக்குது பா...

''இதை தடுக்க, தமிழகம் முழுக்க இருக்கிற, 4,453 கடன் சங்கங்களையும் கம்ப்யூட்டர் மயமாக்கிற பணிகளும், அந்த சங்கங்களை பல்வேறு தொழில் செய்யும் பல்நோக்கு சங்கங்களா மாற்றும் பணியும் துவங்கி இருக்குது...

''இந்த நேரத்துல, கூட்டுறவு துறை செயலரா இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரா இருந்த சண்முகசுந்தரம், நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளரா இருந்த சங்கர்னு, மூணு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும், அரசு சமீபத்துல இடமாறுதல் பண்ணிடுச்சு... இதனால, கம்ப்யூட்டர் மயமாக்கிற பணிகள் எல்லாம் சுறுசுறுப்பா நடக்குமான்னு கேள்வி எழுந்திருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''உதவியாளர்கள் மோதல் உச்சகட்டத்துக்கு போயிட்டு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''உயர்ந்த படிப்புகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஆபீஸ்ல, சிறப்பு நிலை நேர்முக உதவியாளருக்கும், இளநிலை நேர்முக உதவியாளருக்கும், ஏழாம் பொருத்தமாவே இருக்கு... இதுல, இளநிலை உதவியாளர், மேலிடத்துக்கு சொந்தக்காரரா இருக்கிறதால, அவர் பேச்சை தான் அமைச்சரே கேட்காரு வே...

''சிறப்பு நிலை உதவியாளரை கண்டுக்கவே மாட்டேங்காரு... அவருக்கு ஆபீஸ்ல குடிக்க தண்ணீர் கூட குடுக்க கூடாதுன்னு, இளநிலை உத்தரவு போட்டிருக்காரு... அவரை வேலை செய்யவும் விடாம, பல இடைஞ்சல்களை குடுத்துட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.

அப்போது தான் பெஞ்சுக்கு வந்த குப்பண்ணா, ''பிரண்ட் மோகன்ராஜுடன் கோவிலுக்கு போயிருந்தேன்... சோமாஸ்கந்தரை சேவிச்சுண்டு வந்தேன்... அதான் லேட்...'' என்றவரே, ''தொகுதியை, 'கன்பர்ம்' பண்ணிட்டார் ஓய்...'' என்றார்.

''எந்தக் கட்சியில, யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மய்யமான நடிகருக்கு நெருக்கமா இருந்து, எடுத்ததுமே கட்சியின் மாநில பொறுப்புக்கு வந்த பொள்ளாச்சி டாக்டர், அப்பறமா ஆளுங்கட்சிக்கு தாவிட்டாரோல்லியோ... அங்க, மேலிடத்துக்கு நெருங்கிய குடும்பத்துடன் சம்பந்தம் பண்ணியிருக்கார் ஓய்...

''இதை வச்சே, மேலிடத்தின் அடுத்த தலைமுறையை நெருங்கிட்டார்... சமீபகாலமா, தனி பிளைட்ல, 'அடுத்த தலைமுறை'யும், அவரது ஆருயிர் தோழரான, 'மாண்புமிகு'வும் கோவைக்கு பறந்து வரா ஓய்...
Latest Tamil News
''பொள்ளாச்சிக்கு பக்கத்துல இருக்கற டாக்டரின் பிரமாண்ட பண்ணை வீட்டுல தான் தங்கறா... ரெண்டு பேருக்கும் அங்க பலமான உபசரிப்பு, கவனிப்பு எல்லாம் நடக்கறது... இதுல, அவா ரெண்டு பேருமே அசந்து போயிடறா ஓய்...

''இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் ஆளுங்கட்சியினர், 'இந்த டாக்டர், நடிகரையும் இப்படித்தான் கவனிச்சே கவிழ்த்தார்... இப்ப, இவாளையும் வளைச்சுட்டாரா... இதை வச்சே, அடுத்து பொள்ளாச்சி எம்.பி., ஆயிடுவார் பாருங்கோ'ன்னு பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்