Load Image
Advertisement

கடல் அட்டை கடத்திய சிறுவன் கைது

The boy who smuggled the sea card was arrested    கடல் அட்டை கடத்திய சிறுவன் கைது
ADVERTISEMENT
ராமநாதபுரம்:பணம் கிடைக்கும் என்ற ஆசையில் டூவீலரில் கடல் அட்டை கடத்திய 15 வயது சிறுவனை வனத்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மண்டபம், ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதிகளவில் கடல் அட்டைகள் வாழ்கின்றன. ஏப்., முதல் ஜூன் வரை அதிகளவு கடல் அட்டைகள் கிடைக்கும்.

இதனை பிடிக்க தடை உள்ளது. சட்டவிரோதமாக சிலர் இதை பிடித்து வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.இதை தடுக்க உதவி வன பாதுகாவலர், வன ரேஞ்சர்கள் தலைமையில் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் தேவிப்பட்டினம் பகுதியில் சிறுவர்கள் மூலம் கடல் அட்டை கடத்தப்படுவதாக தகவல் கிடைத்து.

உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் குழுவினர் தேவிப்பட்டினத்தில் டூவீலரில் வந்த 15 வயது சிறுவன் கொண்டு வந்த மூடையை ஆய்வு செய்தனர். அதில் 55 கிலோ கடல் அட்டைகள் இருந்தன. சிறுவனை கைது செய்து கடல் அட்டை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், மூடையில் கடல் அட்டை இருப்பது கூட தெரியாமல் பணத்தாசையில் சிறுவன் டூவீலரில் கொண்டு சென்ற போது பிடிபட்டுள்ளார். இதற்கு காரணமான தேவிப்பட்டினம் அயூப் 43, என்பவரை தேடி வருகிறோம்.

இளம் சீறார் நீதிகுழுமத்தில் சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்க உள்ளோம்.விபரம் தெரியாத சிறுவர்களை கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே தெரியாத நபர்களிடம் இதுபோன்ற பொருட்களை வாங்க கூடாது, என பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும், என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement