நகைக்கடையில் திருட்டு
பெரம்பலுார்:பெரம்பலுாரில் நகை வாங்குவது போல் நடித்து 26 கிராம் தங்கக்கட்டியை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலுார் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி 64; தேரடி பஸ் ஸ்டாப் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடையில் ஊழியர்கள் இல்லை. சின்னசாமி கடையில் இருந்தார். அப்போது கடைக்கு வந்த இருவர் நகைகளை பார்வையிட்ட படி கடை கல்லாப்பெட்டி அருகே வைத்திருந்த 26 கிராம் தங்கக்கட்டியை திருடிச் சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்தே தங்கக்கட்டி திருடப்பட்டது தெரிய வந்தது. சின்னசாமி பெரம்பலுார் போலீசில் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் இருவரையும் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!