Load Image
Advertisement

திருவள்ளுவர் சிலைக்குள் தமிழ் சொல் கண்டுபிடிங்க பார்ப்போம்! குளக்கரையோரம் காத்திருகிறது சவால்

Lets find the Tamil word inside Thiruvalluvar statue! A challenge awaits by the pool   திருவள்ளுவர் சிலைக்குள் தமிழ் சொல் கண்டுபிடிங்க பார்ப்போம்! குளக்கரையோரம் காத்திருகிறது சவால்
ADVERTISEMENT
கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், முதல் முறையாக எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிச்சி குளக்கரையோரம் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையில், நான்கு தமிழ் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. கண்டுபிடிப்பதில் இருக்கிறது, தமிழில் உங்கள் புலமை!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிச்சி குளத்தில், ரூ.52.16 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன.

குறிச்சி குளத்தில், 'ஸ்டீல்' கொண்டு உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. விரைவில் திறப்பு விழா காணவுள்ள இச்சிலை, காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைக்கிறது.

நாட்டிலேயே, எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முதல் சிலை என்றால், ஆச்சரியம் இருக்காதா என்ன! இதில், உயிர்(12), மெய்(18), உயிர்மெய்(216) எழுத்துக்கள், ஆயுத எழுத்து (1) என, தமிழ் மொழியில் உள்ள, 247 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

இச்சிலை, 15 அடி அகலம், 25 அடி உயரம், 20 அடி நீளம் என, 2.2 டன் எடையுடன் நிறுவப்பட்டுள்ளது.

'வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலைகள் உள்ளன. நம் நாட்டிலும் சிலைகள் இருந்தாலும் எழுத்துக்களால், அதுவும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலை இது.

'ஸ்டீல்' மூலம் உருவாக்கப்பட்ட இச்சிலை மழை, வெயில் என எந்த சூழலையும் தாக்குப்பிடிக்கக்கூடியது; துருப்பிடிக்காது. 'இதில், தமிழ் மொழியில் உள்ள, 247 எழுத்துக்களுடன் சேர்த்து, நான்கு சொற்கள் மறைந்துள்ளதுதான் உச்சகட்ட 'சீக்ரெட்'.

உதாரணத்துக்கு 'தமிழ்' என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம். சிலை திறப்புக்கு பிறகு, பொது மக்கள் சிலையில் அது எங்கு மறைந்திருக்கிறது என்பதை அறிவதுதான், 'டிவிஸ்ட்' என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்!


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement