ADVERTISEMENT
''கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் வாசகர்களை விட, நான் கதை சொல்வதை கேட்க வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகம்,'' என்கிறார் எழுத்தாளர் பவா செல்லத்துரை.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் எழுத்தாளர், நடிகர் என்பதை விட, மிகச்சிறந்த கதை சொல்லியாக இலக்கிய வாசகர்களின் மனங்களில் இடம் பிடித்து இருக்கிறார்.
இவர் ரசித்து, வாசித்த நாவல்கள, சிறுகதைகளை பற்றி, இலக்கிய வாசகளுக்கு கதை சொல்லுகிறார். இவர் கதை சொல்லும் பாணியை, நுாற்றுக்கணக்கானோர் அமர்ந்து ரசித்து கேட்கின்றனர்.
கோவைக்கு வந்திருந்த அவரை சந்தித்து பேசிய போது, தான் கதை சொல்ல வந்த கதையை நம்மிடம் சொன்னார்...!
இயல்பாகவே நான் அதிகம் புத்தகம் படிப்பவன். படித்த நல்ல கதைகளை பற்றி நண்பர்களிடம் சொல்வது வழக்கம்.
ஒருமுறை என் நண்பர் ஒருவரிடம் கதை சொன்ன போது, அவர் 'நான் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். மைக்கில் இந்த கதையை சொல்; மற்றவர்களும் கேட்கட்டும்' என்றார்.
நானும் சரி என்று சொன்னேன். முதல் கூட்டத்துக்கு, 60 பேர் வந்திருந்தனர். அடுத்த கூட்டத்துக்கு, 500 பேர் வந்தனர். பிறகு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
இதில், வெளியூர்களில் இருந்து வந்து கதை கேட்டவர்கள்தான் அதிகம். ஒவ்வொரு முறையும் வெளியூரில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதனால் அந்தந்த ஊர்களில் இலக்கிய கூட்டம் ஏற்பாடு செய்து, நான் அங்கு சென்று கதைகள் சொன்னேன்.
இதுவரை, 800 சிறுகதைகளுக்கு மேல் சொல்லி இருக்கிறேன். இப்போது 'பெருங்கதையாடல்' என்ற பெயரில், தமிழில் வெளி வந்த முக்கியமான நாவல்களை சொல்ல துவங்கி இருக்கிறேன்.
இதுவரை, 10 நாவல்களை பற்றி பேசி இருக்கிறேன்.
கதைகளை தேர்வு செய்யும் போது, பிரபலமான எழுத்தாளர்கள் கதைகளை மட்டும் சொல்வதில்லை. பல புதிய எழுத்தாளர்களின் கதைகளையும் சொல்லி வருகிறேன்.
கதை சொல்லுதல் என்பது கலை. பழங்காலத்தில் கதைகளை செவிவழியாக கேட்டு ரசிக்கும் முறைதான் இருந்தது.
எழுதியதை படிப்பது என்பது பிற்காலத்தில் வந்தது. இன்றைக்கு பலருக்கு புத்தகம் படிக்கும் மனநிலை குறைந்து விட்டது.
அதனால் கதையை கேட்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். நான் 50 கதைகள் படித்தால், அதில் ஒன்று அல்லது இரண்டு கதைகளை தேந்தெடுத்து, வாசகர்களுக்கு சொல்லுகிறேன்.
எல்லா வயதினரும் கதை சொல்வதை கேட்க வருகின்றனர். கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் வாசகர்களை விட, நான் கதை சொல்வதை கேட்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகம்.
இதுதான் இந்த கதை சொல்லியின் கதை!
'நான் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். மைக்கில் இந்த கதையை சொல்; மற்றவர்களும் கேட்கட்டும்' என்றார். நானும் சரி என்று சொன்னேன். முதல் கூட்டத்துக்கு, 60 பேர் வந்திருந்தனர். அடுத்த கூட்டத்துக்கு, 500 பேர் வந்தனர். பிறகு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!